சங்கரன்கோவிலில் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை முயற்சி

குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை முயற்சி;

Update: 2025-03-05 10:40 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெரும்பத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கொத்தனார் வேலை செய்து வரும் முத்துக்குமார் இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முத்துக்குமார் அவரது 8 மாத குழந்தை செல்வஅரசிக்கு விஷம் கொடுத்து கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதனையறிந்த அவரது மனைவி மற்றும் குழந்தையின் தாத்தா கருணாநிதி ஆகியோர் குழந்தையை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தார்.அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தந்தை முத்துக்குமாரை கரிவலம்வந்தநல்லூர் காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். குடும்ப பிரச்சினை காரணமாக 8 மாத குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் சங்கரன் கோவில் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Similar News