சங்கரன்கோவிலில் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கிய முன்னாள் அமைச்சர்
பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கிய முன்னாள் அமைச்சர்;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை இன்று ஜெயலலிதா 77 வது பிறந்தநாளை முன்னிட்டு வடக்கு மாவட்டம் மருத்துவரணி செயலாளர் திலீபன் ஏற்பாட்டில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் R.B.உதயகுமார் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் பிறந்த மூன்று குழந்தைக்கு தங்க மோதிரம் மற்றும் அம்மா பரிசு பெட்டகம் வழங்கினார். மேலும் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி. கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி (எ)குட்டியப்பா, சங்கரன்கோவில் நகர மன்ற துணைத் தலைவர் கண்ணன், முன்னாள் சட்டமன்ற எம்எல்ஏ சுப்பையா பாண்டியன் உள்ளிட்ட ஏராளமான அதிமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பலர் கலந்து கொண்டனர்.