குப்பை தரம் பிரிக்கும் பணியினை ஆட்சியர் ஆய்வு!
வெங்கடாபுரம் ஊராட்சியில் குப்பை தரம் பிரிக்கும் பணியினை ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;
வேலூர் மாவட்டம் வெங்கடாபுரம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் ரூ.21.55 லட்சம் மதிப்பில், நுண் உரம் தயாரிப்பு மையத்தில் மக்கும் குப்பை, மக்கா குப்பை தரம் பிரிக்கும் பணியினை ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது உதவி இயக்குநர் திருமால், வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வின்சென்ட் ரமேஷ் பாபு உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.