நாற்றங்கால் வளர்ப்பு பணியினை ஆட்சியர் ஆய்வு!
நாற்றங்கால் வளர்ப்பு பணியினை ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்;
வேலூர் ஊராட்சி ஒன்றியம், வெங்கடாபுரம் ஊராட்சியில் உள்ள நாற்றாங்கால் வளர்ப்பு மையத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் நாற்றங்கால் வளர்ப்பு பணியினை ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செந்தில்குமரன், ஒன்றிய குழுத்தலைவர் அமுதா ஞானசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.