காலிப்பணியிடங்களை நிரப்பி, ஊதிய உயர்வு வழங்க வேண்டும்: அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்;
அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில், தஞ்சை பனகல் கட்டிடம் அருகில், வாழ்வாதார கோரிக்கைகளான பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வலியுறுத்தி, சங்கத்தின் தலைவர் எம்.லட்சுமி தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ரமேஷ், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு, அங்கன்வாடி ஊழியர் சங்க நிர்வாகிகள் கலா பாரதி, சங்கீதா, சித்ரா, ராஜகுமாரி, விஜி, தையல்நாயகி, ஹேமா, மலர்கொடி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இப்போராட்டத்தில் 300 க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.