திருவாரூரில் கவிஞர் நந்தலாலாவுக்கு அஞ்சலி.
திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் கவிஞர் நந்தலாலா நினைவு அஞ்சலி.;
திருவாரூர் மாவட்ட பழைய பேருந்து நிறுத்தத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் கவிஞர் நந்தலாலாவின் மறைவை ஒட்டி திருவாரூர் மாவட்ட குழு சார்பில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திருவாரூர் மாவட்ட செயலாளர் வெங்கடேசன், மாவட்ட தலைவர் சௌந்தரராஜன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தமுஎகச மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் மறைந்த கவிஞர் நந்தலாலாவுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.