சுகாதாரமற்ற முறையில் அங்கன்வாடி மையம்
பழனிரோடு பழைய லாரிபேட்ட அங்கன்வாடி சுகாதாரமற்ற இருப்பதால் பெற்றோர் குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்ப மறுக்கின்றனர்.;
திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட 10வது வார்டு பழனி சாலையில் அமைந்துள்ளது சின்ன அய்யங்குளம். பெரிய அய்யங்குளம். லயன் தெரு இங்கு 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. குறிப்பாக அன்றாட கூலி வேலைக்கு செல்லும் பொதுமக்கள் இந்தப் பகுதியில் அதிக அளவில் குடியிருந்து வருகின்றனர். இதற்கிடையே கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இந்த பகுதியில் மாநகராட்சி சார்பில் 3 அங்கன்வாடி கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டது. தற்போது இந்த அங்கன்வாடி மையத்திற்கு செல்லும் பாதை மற்றும் சுற்றிலும் புதர் மண்டி கிடந்ததால் இப்பகுதியைச் சேர்ந்த பெற்றோர் தங்களது குழந்தைகளை மிகவும் சிரமத்திற்கிடையே கொண்டு சென்று விட்டு வந்தனர். தொடர்ந்து இதை முறையாக பராமரிக்காத காரணத்தினால் தற்பொழுது அங்கன்வாடி சுற்றி உள்ள பகுதி புதர் மண்டி விஷ ஜந்துக்களின் கூடாரமாக மாறிவிட்டது ஆங்காங்கே கழிவு நீரோடை நிரம்பி வழிகின்றது. இதனால் சுகாதார சீர்கேடான சூழ்நிலை உள்ளது அங்கன்வாடி கட்டிடத்தை முறையாக பராமரித்து மராமத்து பணி பார்க்காத காரணத்தினால் மேற்கூரை சிதலமடைந்து கட்டிடம் பயன்படுத்தப்பட முடியாத நிலையில் உள்ளது. இதன் காரணமாக இப்பகுதியைச் சேர்ந்த பெற்றோர் தங்களது குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்புவதில்லை தற்பொழுது இந்த கட்டிடம் பழைய பொருட்களை குவித்து வைக்கும் இடமாக உள்ளது. எனவே இந்த அங்கன்வாடி மையத்தை முறையாக மராமத்து பணி செய்து இதனைச் சுற்றியுள்ள செடி கொடிகளை அகற்றி குழந்தைகள் எளிதாக வந்து செல்வதற்கு மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.