கம்மாபுரம்: பயணிகள் நிழற்குடை திறந்து வைப்பு
கம்மாபுரம் பகுதியில் பயணிகள் நிழற்குடை திறந்து வைக்கப்பட்டது.;
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் ஒன்றியம் இருப்பு ஊராட்சி மேற்கிருப்பு முதல் பெரியகாப்பான்குளம் செல்லும் சாலை சந்திப்பில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ 6 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை கட்டிடத்தை கடலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்ஆர் இராதாகிருஷ்ணன் எம்எல்ஏ திறந்து வைத்தார்.