ஆண்டிபட்டி பேரூராட்சி மயான சாலை பணிகளை விரைந்து முடிக்க எம்எல்ஏ மகாராஜன் அறிவுறுத்தல்.

ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.;

Update: 2025-03-07 15:28 GMT
ஆண்டிபட்டி பேரூராட்சி மயான சாலை பணிகளை விரைந்து முடிக்க எம்எல்ஏ மகாராஜன் அறிவுறுத்தல். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் அனைத்து வார்டு கவுன்சிலர்களையும் அழைத்து பேரூராட்சி வார்டு பகுதியில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் பேரூராட்சி அதிகாரிகளிடம் எம்எல்ஏ மகாராஜன் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகள், நடைபெற உள்ள வளர்ச்சி திட்ட பணிகள், அதனுடைய மதிப்பீடுகள், பணிகளின் விபரங்கள், பணிகளின் தரம், பணிகள் முடிக்கப்பட வேண்டிய காலநிலை, செய்யப்பட வேண்டிய பணிகள் உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் வார்டு உறுப்பினர்கள் அந்தந்த வார்டுகளுக்கு தேவையான பணிகள் குறித்து எம்எல்ஏ விடம் கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து அனைத்து வார்டு உறுப்பினர்களும் சாலை வசதி கழிவு நீர், வாறுகால் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கை வைத்து வந்தனர். அப்போது எம்.எல்.ஏ உறுப்பினர்களிடம் அரசுக்கு வளர்ச்சி பணிகள் குறித்து தெரிவிக்க, கவுன்சிலர்கள் அடங்கிய குழு அமைக்க வேண்டுமாயும், வரும் 20 ஆம் தேதிக்குள் குழுவை தேர்வு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார். அதன் பின்னர் ஆண்டிபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 4வது வார்டு குமாரபுரம் பகுதியில் மின் மயானத்திற்கு செல்லும் பகுதியில் புதிய சாலை அமைக்கும் பணி மற்றும் கழிவு நீர் ஓடையில் தடுப்புகள் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அந்தப் பணியினை நேற்று ஆய்வு மேற்கொண்டு பணியின் விவரங்கள் குறித்தும், பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று பேரூராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வில் ஆண்டிபட்டி பேரூராட்சி சேர்மன் பொன்.சந்திரகலா, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Similar News