கே.வி.குப்பம் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை!
கே.வி.குப்பம் அருகே பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சோழமூர் கிராமத்தை சேர்ந்த காந்திமதி (47) இவரது கணவர், மகன் ஆகிய 3 பேரும் கருத்து வேறுபாடு காரணமாக வெவ்வேறு இடங்களில் தனித்தனியாக வசித்து வந்தனர்.இந்நிலையில் காந்திமதி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த லத்தேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.