வேலூர் மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!
பொதுமக்கள் தங்களின் வீட்டுவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி ஆகியவற்றை தாமதமின்றி செலுத்துமாறு மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.;
வேலூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் 2024-2025 நிதியாண்டிற்கான வீட்டு வரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி ஆகியவற்றை வசூல் செய்ய அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு வரி வசூல் முகாம் நடைபெற்று வருகிறது. கிராம பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களின் வீட்டுவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி ஆகியவற்றை தாமதமின்றி செலுத்துமாறு வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.