ஆண்டிபட்டியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பேரூராட்சி தூய்மை பணியாளருக்கு இலவச வேஷ்டி, சேலைகள் வழங்கப்பட்டது.
ஆண்டிபட்டி பேரூராட்சியில் சேர்மன் பொன்.சந்திரகலா ஏற்பாட்டில், பேரூராட்சியில் பணிபுரியும் நூற்றுக்கும் மேற்பட்ட துப்புரவு மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு இலவச வேஷ்டி ,சேலை மற்றும் ரூபாய் 500 ரொக்கமாக வழங்கப்பட்டது;
ஆண்டிபட்டியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பேரூராட்சி தூய்மை பணியாளருக்கு இலவச வேஷ்டி, சேலைகள் வழங்கப்பட்டது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, பேரூராட்சியில் பணிபுரியும் துப்புரவு மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு வேஷ்டி, சேலை மற்றும் ரூபாய் 500 ரொக்கமாக தங்க தமிழ்ச்செல்வன் எம்பி வழங்கினார். தேனி மாவட்டத்தில் பல்வேறு நகராட்சி ,பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் தமிழக முதலமைச்சரின் பிறந்தநாள் விழா தங்க தமிழ்ச்செல்வன் எம்பி தலைமையில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆண்டிபட்டி பேரூராட்சியில் சேர்மன் பொன்.சந்திரகலா ஏற்பாட்டில், பேரூராட்சியில் பணிபுரியும் நூற்றுக்கும் மேற்பட்ட துப்புரவு மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு இலவச வேஷ்டி ,சேலை மற்றும் ரூபாய் 500 ரொக்கமாக வழங்கப்பட்டது. மேலும் அனைவருக்கும் அசைவ உணவு பரிமாறப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி கலந்து கொண்டு துப்புரவு பணியாளர் உடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். இந்நிகழ்ச்சியில் செயல் அலுவலர் விஜயா, பேரூராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், திமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.