தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் கல்வி உபகரணங்கள் விநியோகம்!
பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவியருக்கு எழுது உபகரணங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.;
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை கொண்டாடும் விதத்தில் தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் விருபாட்சிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவியருக்கு எழுது உபகரணங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாமன்ற உறுப்பினர் சுதாகர் கலந்து கொண்டு மாணவியருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.