சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மினி மாரத்தான்.
திருவாரூர் மாவட்டத்தில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு காவல்துறையின் சார்பில் மினி மாரத்தான் நடைபெற்றது.;
திருவாரூர் நகராட்சி முன்பு மாவட்ட காவல்துறை சார்பில். நடைப்பெற்ற உலகமகளிர் தினத்தை ஒட்டி மினிமாரத்தான் ஓட்டம் நடைப்பெற்றது . பெண்காவலர்கள்,பெண்கள் கலந்துக்கொண்டமினிமாரத்தான் ஓட்டத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் காரட் கலந்துக்கொண்டு கொடி அசைத்து துவக்கி வைத்தார். திருவாரூர் நகராட்சி முன்பு இருந்து துவங்கிய மாரத்தான் ஓட்டம் நான்கு வீதிகள் வழியாக வந்து தெற்குவீதியில் முடிவடைந்தது. வெற்றிபெற்றவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கரண்கரட் பரிசுகளை வழங்கினர்.