குமரி கலெக்டருக்கு விருது தமிழக முதல்வர் வழங்கினார்

கன்னியாகுமரி;

Update: 2025-03-09 04:22 GMT
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை நேரு விளையாட்டரங்கில் விழா நேற்று நடந்தது. இதில்  பெண் குழந்தைகள் பாலின விகிதத்தை உயர்த்தியதில் சிறப்பாக செயல்பட்டு முதலிடம் பெற்ற குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் 2025 ஆம் ஆண்டுக்கான மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விருது மற்றும் பதக்கம் பாராட்டு சான்றிதழ் ஆகியவற்றை வழங்கி கௌரவித்தார்.        இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.      . விருது பெற்ற கலெக்டர் அழகுமீனா கூறுகையில்:-  கன்னியாகுமரி மாவட்டமானது பெண் குழந்தைகளின் எண்ணிக்கை உயர்த்துவதற்காக சிறப்பாக செயலாற்றிய முதல் மாவட்டமாக தேர்வு செய்யப்பட்டு, சர்வதேச பெண்கள் தினத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விருது, தங்கம் பதக்கம் வழங்கி பெருமை சேர்த்தமைக்காக கன்னியாகுமரி நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். என கூறினார்.

Similar News