குமரி முக்கடல் அணை நீர்மட்டம் பூஜ்ஜியமாக சரிவு

கன்னியாகுமரி;

Update: 2025-03-09 04:29 GMT
குமரி மாவட்டத்தில் வெயில் கொளுத்தி வருகிறது. கோடை காலம் தொடங்க முன்னரே வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் நீர் நிலைகள் வேகமாக வறண்டு வருகின்றன. மாவட்டத்திலுள்ள அணைகளுக்கும் தண்ணீர் வரத்து குறைந்துவிட்டது.      இதனால் அணைகளின் நீர்மட்டமும் மளமளவென குறைந்து வருகிறது. குறிப்பாக நாகர்கோவில் மாநகர பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்குகின்ற குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான முக்கடல் அணை நீர்மட்டம் 0.7 அடியாக சரிந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை  நீர்மட்டம் 28 அடியாகவும்,  பெருஞ்சாணி 25 அடி என தண்ணீர் உள்ளது.

Similar News