பேச்சிப்பாறை : பேச்சியம்மன் கோவிலில் விளக்குகள் உடைப்பு

கன்னியாகுமரி;

Update: 2025-03-09 06:06 GMT
குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணை அருகே பேச்சியம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் காலை மாலை நேரங்களில் நடை திறந்து பூஜைகள் நடைபெறுவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடித்து விட்டு அர்ச்சகர் மற்றும் நிர்வாகிகள் சென்றுள்ளனர். நேற்று காலையில் மறுபடியும் கோவில் நடை திறக்க வந்த போது கோவில் முன்னால் இருந்த 6 அடி உயரமுள்ள கல் விளக்கு மற்றும் இரண்டு பித்தளை விளக்குகள் மற்றும் ஹோமம் வளர்ப்பதற்காக கட்டப்பட்டிருந்த ஹோம குண்டு ஆகியவை உடைக்கப்பட்டு சேதப்பட்டிருந்தது.         இதையடுத்து அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது பேச்சிப்பாறையை சேர்ந்த ஒருவர் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இது குறித்து கோவில் கமிட்டியை சேர்ந்த அஜி என்பவர் பேச்சிப்பாறை காவல் நிலையத்தில் புகார் செய்தார் போலீசார். விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News