இ ஃபைலிங் முறையை கண்டித்து ராசிபுரத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, நீதிமன்றம் புறக்கணிப்பு...
இ ஃபைலிங் முறையை கண்டித்து ராசிபுரத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, நீதிமன்றம் புறக்கணிப்பு...;
இ ஃபைலிங் முறையை கைவிட வலியுறுத்தி நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டமானது ராசிபுரம் குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் ஆர்.கே.டி. தங்கதுரை தலைமையில் ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது. நீதிமன்ற வளாகத்தின் முன்பு 30க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு இணையதள வசதி ஏற்படுத்திக் கொடுக்காமலும், உரிய தொழில் நுட்பத்துடன் கூடிய நீதிமன்ற ஊழியர்களை நியமனம் செய்யாமலும், நடைமுறையை கட்டாயப்படுத்த கூடாது எனவும், இ ஃபைலிங் காண கட்டமைப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வரை மேனுவல் பில்லிங் முறையை அனுமதிக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இன்று 8.12.2025 முதல் 12.12.2025 அன்று வரை அனைத்து வழக்கறிஞர்களும் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் வாசுதேவன், சிவக்குமார், சுந்தரம், செல்வகுமார், ராதா சந்திரசேகர், குமார், செல்வம், பெரியசாமி, ஹரிஹரசுதன், ஹரிதேவன், முருகன், சுந்தர்ராஜ், சதீஷ்குமார், பூபதி, கீதா, மற்றும் பல வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்...