புளியங்குடி ராணுவ வீரர் உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம்
நெஞ்சுவலியில் இறந்த ராணுவ வீரர் உடலுக்கு ராணுவ மரிஞ;
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள வெள்ளானைக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன்(44) இவர் இந்திய ராணுவத்தில் அசாம் பகுதியில் 11வது பாரா பிரிவில் ஹெவில்தாராக கடந்த 25 வருடங்களாக பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஒரு மாத விடுமுறைக்காக தனது சொந்த ஊரான வெள்ளானைக்கோட்டை பகுதிக்கு வந்த இவர் நேற்றைய தினம் நெஞ்சுவலி ஏற்பட்டதாக புளியங்குடி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற நிலையில் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து உயிரிழந்த ராணுவ வீரரின் உடலுக்கு இராணுவ மரியாதையுடன் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவருக்கு செல்லம்மாள் என்ற மனைவியும் ஒரு 20 வயது மகனும் உள்ளனர் இராணுவ வீரரான வெங்கடேஸ்வரனுக்கு இன்னும் ஒரு மாதத்தில் பணி நிறைவு பெற உள்ள நிலையில் நெஞ்சு வலியில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சேகத்தை ஏற்படுத்தியுள்ளது.