குமரி மாவட்டம் கருங்கல் அருகே கண்ணன் விளை பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (38). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி அனுஷா (31). கடந்த சில தினங்களுக்கு முன்பு காலையில் பிள்ளைகளை பள்ளியில் கொண்டு விட்டு விட்டு வந்த ஜெகன் மனைவியின் கழுத்தை கத்தியால் வெட்டினார். அவர் அலறி அடித்து வீட்டிலிருந்து வெளியே வந்தார். அக்கம் பக்கத்தினர் வீட்டில் சென்று பார்த்தபோது மாடியில் உள்ள அறையில் ஜெகன் இரண்டு கைகளிலும் கழுத்திலும் அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். இருவரையும் மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து அனுஷாவின் தாயார சத்தியவதி என்பவர் கருங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் கடன் தொல்லையால் இந்த சம்பவம் நடந்ததாக தெரியவந்தது. இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஜெகன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.