ஆண்டிபட்டியை சேர்ந்த ரமேஷ் கலெக்டர் அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் தன்னிடமிருந்து அலைபேசி மற்றும் 3.5 பவுன் செயினை பழனிசெட்டிபட்டியை சேர்ந்த சீமான், அவரது நண்பர் சித்தார்த் மற்றும் சிலர் சேர்ந்து பறித்து சென்றதாக புகார் அளித்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் வழிப்பறியில் ஈடுபட்ட சீமான், முகேஷ்குமாரை கைது செய்தனர்.