கோவை: தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலம் !
தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக திகழ்கிறது என்று L. முருகன் குற்றச்சாட்டு.;
மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கோவை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு என்னுடைய மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன், கடந்த பத்து ஆண்டுகளில் மகளிர் மேம்பாட்டுக்காக, கடுமையாக பிரதமர் நரேந்திர மோடி மிகக் கடுமையான பணிகளை செய்து கொண்டு இருக்கிறார். வரலாற்று சிறப்புமிக்க 33 சதவீத இட ஒதுக்கீட்டை சட்டமன்றத்திலும் பாராளுமன்றத்திலும் கொண்டு வந்திருப்பது நரேந்திர மோடி அவர்கள் தான். கிட்டத்தட்ட பத்து கோடிக்கும் அதிகமானவர்களுக்கு இலவச கேஸ் கனெக்சன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இலவச வீடு கட்டும் திட்டத்தின் வீட்டுமனை பட்டா தாய்மார்களின் பெயர்களில் தான் பதிவு செய்யப்படுகிறது. முத்ரா லோன்களில் கிட்டத்தட்ட 70% பயனாளிகள் பெண்களாக உள்ளார்கள். சந்திரயான் திட்டத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கக் கூடியவர்கள் பெண்களாக இருக்கிறார்கள், நம்முடைய பெண்கள் சயின்ஸ் டெக்னாலஜி என முன்னேற்ற பாதையில் சென்று கொண்டு இருக்கிறார்கள். நரேந்திர மோடி எடுத்திருக்கும் திட்டங்களால் women empowerment ஒருபடி மேலே தான் சென்றிருக்கிறது. குறிப்பாக Defence National defence academy ல் முதன் முறையாக பெண்களுக்கு இடம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. தமிழகம் தான் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக இருக்கிறது என்று கூறினார்.