கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் முத்துராஜ் (25). இவர் அவரது இரு சக்கர வாகனத்தில் நேற்று (மார்ச் .8) கோகிலாபுரம் அருகே சென்றுள்ளார். அப்பொழுது எதிர் திசையில் சிவக்குமார் என்பவர் ஓட்டி வந்த ஆட்டோ நிலை தடுமாறி கீழே கவிழ்ந்தது. கவிழ்ந்த ஆட்டோ முத்துராஜ் பைக் மீது மோதியதில் அவர் படுகாயம் அடைந்த நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிவு.