திட்டச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்
போதுமான கழிவறை வசதி ஏற்படுத்த தூய்மை பாரத இயக்கம் நேரில் ஆய்வு;
நாகை மாவட்டம் திட்டச்சேரியில் உள்ள, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், 152 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். ஆனால் அப்பள்ளியில், போதிய கழிவறை வசதி இல்லாமல் உள்ளது. எனவே, போதுமான கழிவறை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என பள்ளி மேலாண்மை குழுவினர் மற்றும் பெற்றோர் அளித்த கோரிக்கையை ஏற்று, மாவட்ட திட்ட இயக்குனர் ரூபன் சங்கர்ராஜ் அறிவுறுத்தலின்படி, கழிப்பறை அமைப்பது தொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் (தூய்மை பாரத இயக்கம்) இளங்கோ, வட்டார ஒருங்கிணைப்பாளர் அய்யப்பன் ஆகியோர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், வருகிற கல்வி ஆண்டிற்குள் கழிவறைகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். ஆய்வின்போது, பள்ளி தலைமை ஆசிரியர் கலைச்செல்வி மற்றும் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.