படப்பை குப்பை கிடங்கில் தீ விபத்து

படப்பையில் உள்ள குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து;

Update: 2025-03-09 11:39 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துார் அருகே, படப்பை ஊராட்சி உள்ளது. இங்கு சேகரிக்கப்படும் குப்பை, படப்பை, பெரியார் நகர் பகுதியில், மலை போல் கொட்டி வைக்கப்பட்டுள்ளன. நேற்று இரவு, அந்த குப்பையில் திடீரென, தீ கொழுந்து விட்டு எரிந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், அருகில் உள்ள அடர்ந்த மரங்களுக்கு தீ பரவாமல் தடுத்து, இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். படப்பை குப்பை கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஆனது உருவாகியது.

Similar News