மனைவியை கம்பியால் தாக்கி கணவர் தற்கொலை

பத்துக் காணி;

Update: 2025-03-09 11:57 GMT
குமரி மாவட்டம் பத்துகாணி பகுதியை சேர்ந்தவர் அனில் குமார் என்ற அனிகுட்டன் (48).  ஆட்டோ டிரைவர். இவரது மனைவி தன்யா (40) இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். தன்யா மளிகை கடை நடத்தி வருகிறார். இதற்கு இடையே அதே பகுதியை சேர்ந்த பாஜக பிரமுகர் மது குமார் என்பவர் தனியாவுக்கு முத்தம் கொடுத்ததை கணவர் அனி குட்டன் பார்த்ததாக கணவன் மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது.         இந்த தகராறு தொடர்பாக மதுக்குமாரும் தன்யாவுமாக இணைந்து அனிகுட்டனை தாக்கி வாளால் வெட்ட முயன்ற சம்பவங்கள் நடந்து. ஆறுகாணி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மதுகுமாரை போலீசார் கைது செய்து தற்போது அவர் ஜாமீனில் வெளியில் உள்ளார்.   .    இந்த நிலையில் மீண்டும் அனி குட்டன் தன்யாவுக்கு இடையே மறுபடியும் பிரச்சனை ஏற்பட்டதாக தெரிகிறது. இதற்கிடையே மனைவி மீது ஆத்திரத்தில் இருந்த அனிகுட்டன் இன்று 9-ம் தேதி  காலை தன்யா தனது மளிகை கடையை திறப்பதற்காக சென்ற போது அவரை பின்தொடர்ந்து  மனைவியை தாக்கியுள்ளார். கீழே விழுந்த தன்யா இறந்துவிட்டார் என்று நினைத்த அனிகுட்டன் வீட்டிற்கு சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.        ஆறுகாணி  போலீசார் தன்யாவை  மீட்டு கேரள மாநிலம் காட்டாக்கடையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை சேர்த்தனர். தற்கொலை செய்து கொண்ட  அனிகுட்டன் உடலை போலீசார் அரசு ஆஸ்பத்திரியில் வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News