இந்தோனேசியாவை சேர்ந்த இளம் பெண்ணை

நாகையில் திருமணம் செய்த மீனவ இளைஞர்;

Update: 2025-03-09 12:11 GMT
நாகை மாவட்டம் கீச்சாங்குப்பம் சேவாபாரதியை சேர்ந்தவர் கண்ணதாசன். மீனவர். இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களின் மகன் ஜெசின் குமார். இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பிஇ படித்தார். இதையடுத்து, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூர் சென்றார். அங்குள்ள சிங்கப்பூர் அரசுக்கு சொந்தமான கப்பல் கட்டும் தளத்தில் பொறியியல் பிரிவில் மேலாளராக பணியாற்றி வந்தார். இந்தோனேஷியாவை சேர்ந்தவர் அன்டோனியஸ்மார்டினஸ்ராபா. இவரது மனைவி அடோல்பினாலோட்டோபாரிங்கி. இவர்களது மகள் கிரேஸ்வீல்டிராபா. பிஇ பட்டதாரியான இவர் சிங்கப்பூர் அரசுக்கு சொந்தமான கப்பல் கட்டும் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். இதையடுத்து, 2 பேரும் காதலிக்க தொடங்கினர். கடந்த 3 ஆண்டு காலமாக காதலித்து வந்த இவர்கள், இந்து முறைப்படி திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டனர். தங்களது விருப்பத்தை 2 பேரும் தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து, 2 வீட்டார் சம்மதத்துடன் நேற்று (9-ம் தேதி) நாகையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்து முறைப்படி புரோகிதர்கள் வைத்து நடந்த திருமணத்தில், மணமகன் வீட்டில் இருந்து ஏராளமானவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Similar News