மரவள்ளி கிழங்கிற்கு அரசே விலையை நிர்ணயம் செய்யுமா.
மரவள்ளி கிழங்கிற்கு அரசே விலையை நிர்ணயம் செய்யுமா விவசாயிகள் எதிர்பார்ப்பு.;
பரமத்திவேலூர், மார்ச்.9: மரவள்ளி பயிர் செய் துள்ள விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டத்தை தவிர்க்க மரவள்ளி கிழங்கிற்கு அரசே கொள்முதல் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்சுப்பள்ளி, பரமத்தி, அண் ணாநகர், பிலிக்கல்பாளையம், அய்யம்பாளையம், ஜேடர்பாளையம், கூடச் சேரி, கபிலர்மலை. சின்னமரு தூர்,சோழசிராமணி.பெருங் குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மரவள்ளிக்கி ழங்கு பயிரிடப்பட்டு உள்ளது. இந்த பகுதிகளில் விளையும் மரவள்ளிகிழங்குகளை வியாபாரிகள் வாங்கி புதன் சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலைவேப்பங் குட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர். கிழங்கு ஆலைகளில் மரவள்ளிகிழங்கில் இருந்து ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும் சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச்செல்கின்றனர். மரவள்ளிக்கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள் அதில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலையை நிர்ணயம் செய்கின்றனர். இந்த விலை நிர்ணயம் சீராக இல்லாததால் விவசாயிகள் நஷ்டத்தைசந்தித்து வருகின்றர். மரவள்ளியில் கள்ளி பூச்சி, மாவு பூச்சி மற்றும் சிவப்பு சிலந்தி பூச்சி ஆகியவை தாக் குதல் அதிகமாக உள்ளது. இதனால் மரவள்ளி பயிர்கள் மோசமாக பாதிக்கப்படுவது டன் சுமார் 5 டன் முதல் 10 டன் வரை மட்டுமே மகசூல் கிடைப்பதால் விவசாயிகள் மிகுந்தநஷ்டத்திற்கு உள்ளாகும் நிலை உருவாகிறது. ஏக்கர் ஒன்றுக்கு சுமார் 15 டன் முதல் 20 டன் வரை மகசூல் கிடைத்தால்தான் வில சாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் மரவள்ளி பயிரை தாக்கும் கள்ளிப்பூச்சி, மாவு பூச்சி மற்றும் சிவப்பு சிலந்தி பூச்சி தாக்குதலை உரிய காலத்தில் கட்டுப்படுத்த வேளாண்மை துறையினர் மரவள்ளி பயிர் செய்துள்ள விவசாயிகளுக்கு அவ்வப்போது தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டும். மேலும் தமிழக அரசே மரவள்ளிகிழங்கிற்கு உரிய கொள் முதல் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என மரவள்ளி கிழங்கு பயிர் செய்துள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.