சாணார்பட்டி அருகே பேச மறுத்த காதலியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட வாலிபர் கைது
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி;
திண்டுக்கல் அருகே குட்டத்து ஆவாரம்பட்டியை சேர்ந்த ஜெயசீலன் (25) சாணார்பட்டி அருகே உள்ள கல்லுாரி மாணவியிடம் பழகி காதலித்து வந்துள்ளார். ஜெயசீலனின் பழக்கவழக்கங்கள் மாணவிக்கு பிடிக்காததால் அவரிடம் பேசுவதை தவிர்த்து வந்தநிலையில் தன்னுடன் பேசுமாறு கல்லூரி மாணவியை வற்புறுத்தியுள்ளார் அதற்கு கல்லூரி மாணவி மறுத்ததால் ஆத்திரமடைந்த ஜெயசீலன் மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இது குறித்து சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அமுதா தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு ஜெயசீலனை கைது செய்தனர்