காதலியுடன் வேளாங்கண்ணி விடுதியில் தங்கியிருந்த இளைஞரை

நண்பர்களே அடித்துக் கொன்று கருவை காட்டில் வீசிய கொடூரம்;

Update: 2025-03-09 13:36 GMT
கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (22). அதே முகவரியைச் சேர்ந்தவர் எலன்மேரி (21). காதலர்கள். இவர்கள் 2 பேரும் கடந்த 1 மாதத்திற்கு முன், வேளாங்கண்ணி மாதா கோவிலில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். அதன் பின் 2 நாள் கழித்து வேளாங்கண்ணிக்கு வந்த ஜனார்த்தனனின் நண்பர்களான, கர்நாடகா மாநிலம் சிவமுகா பகுதியை சேர்ந்த சாகர், ஜீவா இருவரும் ஜனார்த்தனன் மற்றும் எலன்மேரியுடன் அவர்களது அறையிலேயே தங்கியிருந்துள்ளனர். இந்நிலையில், எலன்மேரியைத் தவிர மற்ற மூவரும் நேற்று வெளியே சென்றுள்ளனர். எலன்மேரி இருந்த அறைக்கு வந்த சாகர், ஜீவா ஆகியோர் உன் கணவனை வேளாங்கண்ணி ரயில்வே ஸ்டேஷன் அருகில் கொலை செய்து போட்டு விட்டோம் என்று தெரிவித்து விட்டு இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். எலன்மேரி, ஜனார்த்தனனை வேளாங்கண்ணி ரயில்வே ஸ்டேஷன் அருகில் தேடி பார்த்த போது, ரயில்வே ஸ்டேஷனுக்கு கிழக்குப் பகுதியில் கருவை காட்டில் ஜனார்த்தன் முகம் மற்றும் தலையில் ரத்தக் காயத்துடன் இறந்த கிடந்தது தெரியவந்துள்ளது. தகவலறிந்த, வேளாங்கண்ணி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய இருவரையும் தேடி வந்தனர். இந்நிலையில், அவர்கள் 2 பேரையும் வேளாங்கண்ணி போலீசார் தஞ்சையில் கைது செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Similar News