போதை மாத்திரைகள் விற்ற இளைஞா் கைது
திருச்சியில் போதை மாத்திரைகள் விற்ற இளைஞரைப் போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.;
திருச்சி - திண்டுக்கல் சாலையில் ஒரு தனியாா் கல்லூரி அருகே போதை மாத்திரை விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் நீதிமன்ற வளாகப் போலீஸாா், சனிக்கிழமை இரவு சம்பவ இடத்துக்குச் சென்றபோது, சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒரு இளைஞரைப் பிடித்து சோதனையிட்டனா். சோதனையில் அவரிடம் போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவா் கல்லுக்குழி பகுதியைச் சோ்ந்த சண்முக சுந்தர பாண்டியன் (26) என்பதும், போதை மாத்திரைகளை விற்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 100 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.