மகனின் ஆசையை நிறைவேற்ற அவரது காதணி விழாவில்

ஆடுங்குதிரையில் ஏற்றி வைத்து அழகு பார்த்த தந்தை;

Update: 2025-03-10 08:24 GMT
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த சிகார் பகுதியை சேர்ந்தவர் ஸ்டாலின். சென்னையில் உள்ள கப்பல் துறைமுகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வனிதா. இவர்களது மகன் ராம் விக்னேஷ் (15), மகள் மீரா (13). இவர்களது காதணி விழாவை வெகு விமர்சையாக நடத்த ஸ்டாலின் திட்டமிட்டு வந்தார். ராம் விக்னேஷ் பக்கத்து ஊரில் நடந்த திருவிழா ஒன்றில் ஆடுங்குதிரையை கண்டு, அதில் ஏற ஆசை கொண்டுள்ளார். ஆகவே, தனது மகனுக்கு தெரியாமல் அவனது ஆசையை நிறைவேற்ற காதணி விழாவில், மகனுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் ஆடும் குதிரையை வரவழைத்து அதில் தனது மகன் ராம் விக்னேஷை ஏற்றி அழகு பார்த்த ஸ்டாலின், குதிரையை ஊர்வலமாக மண்டபம் வரை அழைத்து வந்தார். மேலும், குதிரைக்கு பின்னால் பேண்டு வாத்தியங்கள் முழங்க  நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தங்களுடைய வரிசை தட்டுகளை சுமந்தபடி வந்தனர். தொடர்ந்து, ஆந்தகுடி பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் காதணி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இசைக்கு ஏற்ப குதிரை நடனம் ஆடியதை அனைவரும் கண்டு ரசித்தனர். மேலும், விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் லட்சக்கணக்கில் செலவு செய்து, பிரியாணி வழங்கினார். தனது மகனின் ஆசையை நிறைவேற்ற தந்தை, ஆடும் குதிரையை வரவழைத்து காதணி விழாவை திருவிழா போல நடத்தியது, ராம் விக்னேஷின் மனதை நெகிழ செய்துள்ளது.

Similar News