மரத்தில் பைக் மோதி தொழிலாளி உயிரிழப்பு
திருப்பத்தூர் அருகே சாலையோர மரத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தார்.;
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் புதுத்தெருவைச் சேர்ந்த கூலி தொழிலாளி செங்குட்டுவன்(42). இவர் நேற்று முன்தினம் இரவு பட்டமங்கலத்தில் வேலையை முடித்து விட்டு, அம்மாபட்டி பெருமாள்(48) என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் ஊருக்கு புறப்பட்டார். ஆத்தங்கரைப்பட்டி விலக்கு பகுதியில் வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சாலையோர மரத்தில் இருசக்கர வாகனம் மோதியது. இதில் படுகாயமடைந்த இருவரையும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு செங்குட்டுவன் உயிரிழந்தார். பெருமாள் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். இந்த விபத்து குறித்து திருக்கோஷ்டியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.