உம்பளச்சேரி ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள

நியாய விலை கடை கட்டிடத்தை ஒன்றிய செயலாளர் திறந்து வைத்தார்;

Update: 2025-03-10 12:46 GMT
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு ஒன்றியம் உம்பளச்சேரி ஊராட்சியில், புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய விலை கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு, தலைஞாயிறு ஒன்றிய செயலாளரும், மாநில விவசாயிகள் ஆலோசனை குழு உறுப்பினருமான மகா குமார் குத்துவிளக்கு ஏற்றி வைத்து புதிய ரேஷன் கடை கட்டிடத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் வெங்கடாசலம், கிளைக் கழக செயலாளர்கள் வீரையன், வைத்தியநாதன், காளிமுத்து, முருகையன், முருகானந்தம், சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் பாரதி, ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் மற்றும் கூட்டுறவுத் துறை அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News