வயதான தம்பதியரை தாக்கிய மூன்று பேர் கைது

கைது;

Update: 2025-03-10 13:34 GMT
ஆண்டிபட்டியை சேர்ந்தவர் வனராஜ் (60). இவரது மனைவி தமிழ்ச்செல்வி (54). இவர்கள் தேனி கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள அவர்களது காலி இடத்தில் தகரக் கொட்டகை அமைக்கச் சென்றனர். அப்போது அங்கு வந்த அறிவழகன், பால்பாண்டி, முருகன் ஆகியோர் அந்த இடத்தில் தங்களுக்கும் பங்கு உள்ளது என கூறி வனராஜ், தமிழ்ச்செல்வியுடன் தகராறு செய்து அவா்களைத் தாக்கி உள்ளனர். தேனி போலீசார் 3 பேரையும் நேற்று (மார்.9) கைது செய்தனர்.

Similar News