தேனி நகராட்சியில் வரி செலுத்தாத குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு
துண்டிப்பு;
தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முறையற்ற, நீண்ட நாள் குடிநீர் பாக்கி மற்றும் கடை வாடகை செலுத்தாதவர்களுக்கு நகராட்சி சார்பில் நோட்டிஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில் அவர்களுக்கு காலக்கெடு முடிந்த நிலையில் இதுவரை 45 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், வாடகை செலுத்தாத மூன்று நகராட்சி கடைகள் மூடப்பட்டதாகவும் நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.