உத்தமபாளையம் மதுவிலக்கு போலீசார் நேற்று (மார்.9) காமயகவுண்டன்பட்டி பகுதியில் சட்டவிரோத மது விற்பனை சம்பந்தமாக ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் மகேந்திரன், ஆனந்தன் ஆகியோர் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 54 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் மகேந்திரனை கைது செய்து ஆனந்தனை தேடி வருகின்றனர்.