தேனி காவல் நிலைய போலீசார் நேற்று (மார்.9) தேனி புதிய பேருந்து நிலையம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் ராஜேஷ் என்பவர் பொதுமக்களை அருவருப்பூட்டும் வகையில் ஆபாசமாக பேசி போக்குவரத்திற்கு இடையூறு செய்துள்ளார். போலீசார் எச்சரித்தும் அவர் கேட்காத நிலையில் ராஜேஷ் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.