ஓமலூர் அருகே மான் வேட்டையாடிய வாலிபர் கைது

துப்பாக்கி குண்டுகள், வலை பறிமுதல்;

Update: 2025-03-11 03:22 GMT
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பொட்டியபுரம் கீழ்த்தெரு பகுதியை சேர்ந்த கோவிந்தன் மகன் சுப்பிரமணி (வயது 23). இவர், வனவிலங்குகளை வேட்டையாடி அவற்றின் இறைச்சியை அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக வனத்துறைக்கு புகார் வந்தது. தொடர்ந்து வனத்துறையினர் சுப்பிரமணியின் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் வேட்டைக்கு பயன்படுத்தும் துப்பாக்கி பால்ரஸ் குண்டுகள், வனவிலங்குகளை பிடிக்க வைத்திருந்த வலைகள், மான், பன்றி இறைச்சியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து சுப்பிரமணியனை, வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது மேலும் 2 பேர் அவருக்கு உடந்தையாக இருந்தது தெரிய வந்துள்ளது. அவர்களை கைது செய்யும் பணியில் வனத்துறையினரும், போலீசாரும் ஈடுபட்டுள்ளனர்.

Similar News