திருச்சி-தாம்பரம் இடையே சிறப்பு ரயில்

கோடைகால கூட்ட நெரிசலை குறைக்க திருச்சி-தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.;

Update: 2025-03-11 20:35 GMT
திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோடைகால கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக திருச்சி-தாம்பரம் ஜன் சதாப்தி சிறப்பு விரைவு ரயிலானது (06190) வரும் ஏப். 4, 5, 6, 11, 12, 13, 18, 19, 20, 25, 26, 27 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது. மறுமாா்க்கமாக, தாம்பரம்-திருச்சி ஜன் சதாப்தி சிறப்பு விரைவு ரயிலானது (06191) வரும் ஏப். 4, 5, 6, 11, 12, 13, 18, 19, 20, 25, 26, 27 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது. 21 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரயிலானது, திருச்சியிலிருந்து காலை 5.35 மணிக்குப் புறப்பட்டு தஞ்சாவூா், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீா்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூா், பண்ருட்டி, விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூா், செங்கல்பட்டு வழியாக தாம்பரத்துக்கு பிற்பகல் 12.30 மணிக்குச் சென்றடையும். மறுமாா்க்கமாக, தாம்பரத்திலிருந்து பிற்பகல் 3.45 மணிக்குப் புறப்பட்டு மேற்கண்ட வழித்தடம் வழியாக திருச்சிக்கு இரவு 10.40 மணிக்கு வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News