திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று அதிகாலை தொடங்கிய மழையானது இன்று அதிகாலை வரை பெய்து வருகின்றது. இவ்வாறு பெய்த தொடர் மழையின் காரணமாக பிரதான அருவியான அகஸ்தியர் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அகஸ்தியர் அருவியில் குளிக்க இன்று வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.