பஸ் மீது கல்வீசி கண்ணாடியை உடைத்த வாலிபரால் பரபரப்பு
விசாரணையில் மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் என தகவல்;
திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து நேற்று காலை ஒரு அரசு பஸ் திருச்சி சிந்தா மணி அண்ணாசிலை வழியாக துவாக்குடிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு வாலிபர் கையை காட்டி பஸ்சை நிறுத்த முயன்றார். ஆனால் டிரைவர் பஸ்சை நிறுத்தாமல் சென்றதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் கீழே கிடந்த கல்லை எடுத்து பஸ்சின் முன்பகுதி கண் ணாடி மீது வீசினார். இதில் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இத னால் டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தினார். இந்த கல்வீச்சு சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதையடுத்து பயணிகள் அனைவரும் பஸ்சில் இருந்து இறக்கி விடப் பட்டு மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். இதில் அந்த வாலிபர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்த தாக போலீசார் தெரிவித்தனர். மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள் ளது.