தேசிய கல்லூரியில் என்.சி.சி. மாணவர்களுக்கான போட்டி

டெல்லியில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் பங்கேற்பதற்கு தேவையான திறன்களை வளர்த்துக்கொள்ளும் விதமாக சிறந்த மாணவர்களுக்கு போட்டி நடத்தப்பட்டது;

Update: 2025-03-12 07:36 GMT
திருச்சி தேசிய கல்லூரியில் என்.சி.சி. மாணவர்களுக்கான கலை மற் றும் திறன் போட்டிகள் நடத்தப்பட்டன. கல்லூரி முதல்வர் கே.குமார் தலைமை தாங்கினார். இதில் 24 கல்லூரிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதலாம் ஆண்டு என்.சி.சி. மாணவர்கள் கலந்து கொண்ட னர். ஆண்டுதோறும் டெல்லியில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் பங்கேற்பதற்கு தேவையான திறன்களை வளர்த்துக்கொள்ளும் விதமாக சிறந்த மாணவர்களுக்கு போட்டி மற்றும் டிரில், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. சிறப்பு விருந்தினராக திருச்சி என்.சி.சி. குழுவின் அதி காரி கர்னல் ஒய்.விஜயகுமார் கலந்து கொண்டு பேசினார். இதில் முத லிடத்தை திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரி மாணவிகள் பெற்றனர். 2-வது இடத்தை மதுரை அமெரிக்கன் கல்லூரி என்.சி.சி. மாணவர்கள் பெற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் தரைப்படை என்.சி.சி. அதிகாரி கேப்டன் கே.ராமர் மற்றும் முன்னாள் என்.சி.சி. மாணவர்கள் செய்திருந்தனர்.

Similar News