பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரம்

தர்மபுரி நகர பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் தீவிரம்;

Update: 2025-03-13 12:18 GMT
தர்மபுரி நகர பேருந்து நிலையத்தில்கடை உரிமையாளர்கள் நடைபாதை பகுதிகளில் ஆக்கிரமித்து கடை வைத்தும் இருசக்கர வாகனங்களை நிறுத்தியும் வந்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட புறநகர் மற்றும் நகர பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் சதீஸ் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார் . இதனை அடுத்து இன்று மார்ச் 13 நகராட்சி ஆணையாளர் சேகர் நகர் நல அலுவலர் இலட்சியவர்னா தலைமையில் அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். மேலும் நடைபாதை வியாபாரிகள் மற்றும் கடை வைத்து வியாபாரம் செய்யும் நபர்களை ஆக்கிரமிப்பு செய்யாமல் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விழிப்புணர்வு செய்தனர் உடன் தர்மபுரி நகர காவலர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.

Similar News