கூட்டுறவுத்துறை பணியாளர்களின் குறைதீர்க்கும் கூட்டம்

திருச்சியில் கூட்டுறவுத்துறை பணியாளர்களின் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது;

Update: 2025-03-13 12:45 GMT
தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆணைப்படி கூட்டுறவுத் துறை அமைச்சர், கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு சங் கங்களின் பணியாளர்களின் குறைகளை தீர்வு செய்யும் பொருட்டு,2 மாதங்களுக்கு ஒருமுறை மண்டல அளவில் பணியாளர் நாள் நிகழ்வு நடத்தப்படும் என மானிய கோரிக்கையின் போது அறிவித்தார். திருச்சி மண்டலத்தில்கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவுரைப்படி, 2 மாதங்களுக்கு ஒருமுறை 2-வது வெள்ளிக்கிழமை குறைதீர்க்கும் பணி யாளர் நாள் நடத்தப்பட உள்ளது. அதன்படி பணியாளர் நாள் நாளை (வெள்ளிக்கிழமை) திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் அண்ணா நகர் கிளையில் காலை 10.30 மணிக்கு நடக்கிறது. பணியா ளர்கள் தங்கள் குறைகள் தொடர்பான விண்ணப்பங்களை http://rcs.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் பதி வேற்றம் செய்யலாம். அவ்வாறு பதிவிட இயலாதவர்கள் கூட்டத்தின் போது, விண்ணப்பங்களை நேரடியாக வழங்கலாம். அந்த விண்ணப் பங்கள் பணியாளர் நாள் நிகழ்வின்போதே ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டு 2 மாதங்களுக்குள் தீர்வு செய்யப்படும். எனவே திருச்சி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையில் பணிபுரிந்து வரும் அனைத்து பணி யாளர்களும், நிறுவனங்களின் அனைத்து நிலை பணியாளர்கள், ரேஷன்கடை விற்பனையாளர், கட்டுனர் தங்களுக்கு ஏதேனும் குறை இருப்பின் பணியாளர் நாள் நிகழ்வினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கூட்டுறவு சார்பதிவாளர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News