ஓதுவார் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு
பணகுடி அருள்மிகு இராமலிங்க சுவாமி திருக்கோவில்;
திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருள்மிகு இராமலிங்க சுவாமி திருக்கோயிலில் ஓதுவார் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறங்காவலர் குழு தலைவர் அசோக்குமார்,செயல் அலுவலர் மாரியப்பன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். விண்ணப்பதாரர்கள் மார்ச்.1 அன்று 18 வயதிற்கு கீழ் உள்ளவராகவும் 35 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருக்கக் கூடாது. விண்ணப்பங்களை வருகின்ற ஏப்.1 மாலை 5:45 மணிக்குள் கோயில் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.