பென்னாகரத்தில் நடமாடும் மருத்துவ வாகனம் துவக்கம்

பென்னாகரம் எம்எல்ஏ ஜி.கே.மணி தலைமையில் நடமாடும் கால்நடை மருத்துவ வாகனம் துவக்க விழா;

Update: 2025-03-14 09:04 GMT
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வட்டார விவசாயிகள் ஆடு, மாடு, கால்நடை வளர்ப்போர் மற்றும் பொது மக்கள் பயன்பெறும் வகையில் இன்று, தமிழக கால்நடை மற்றும் பராமரிப்பு துறை மூலம் நடமாடும் கால்நடை மருத்துவ வாகனம் பென்னாகரத்தில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினரும் பாமக கௌரவ தலைவருமான ஜிகே மணி துவக்கி வைத்தார். மேலும் விவசாயிகள் பொதுமக்கள் தவறாமல் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் மேலும் அவசர உதவிக்கு 1962 என்ற தொலைபேசி எண்ணை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார் மேலும் இந்த நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்பு துறை அலுவலர்கள் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News