தா பழூரில் தொழில் பயிற்சி நிலையம் அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு தொகுதி மக்கள் சார்பாகவும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் சார்பாகவும் நன்றி தெரிவிப்பு.

தா பழூரில் தொழில் பயிற்சி நிலையம் அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு தொகுதி மக்கள் சார்பாகவும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் சார்பாகவும் நன்றி தெரிவிக்கப்பட்டது..;

Update: 2025-03-14 14:05 GMT
அரியலூர், மார்ச்14- சென்னையில்,2025 - 2026 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட,சட்டமன்ற கூட்டத்தொடரில்,ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் தா பலூரில் புதிய தொழிற்பயிற்சி நிலையம் அமைக்க வேண்டுமென சட்டமன்ற கூட்டத்தொடரில் வைத்த கோரிக்கையை ஏற்று ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, தா.பழூரில் புதிய தொழிற்ப் பயிற்சி நிலையம்(ITI) இந்த ஆண்டு துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அரியலூர் மாவட்டம்,ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, தா.பழூரில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையம் அறிவித்த, தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலினுக்கும், அமைச்சர்களுக்கும் ஜெயங்கொண்டம் தொகுதி மக்களின் சார்பாகவும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் நன்றி தெரிவித்தார்.

Similar News