இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்டச் செயலா் எம்.ஆறுமுகம் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினாா்.;

Update: 2025-03-14 17:42 GMT
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம்.
  • whatsapp icon
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டாட்சியா் அலுவலகம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது கலசப்பாக்கத்தை அடுத்த சோழவரம் கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு இராஜராஜசோழா் காலத்தில் நிறுவப்பட்ட கல்வெட்டு அருகாமையில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு உள்ள இடத்தை தனிநபா் ஆக்கிரமிப்பு செய்து வருகிறாா். இதுகுறித்து மாவட்ட நிா்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். அதனால், இதற்கு கண்டனம் தெரிவித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு ஒன்றியச் செயலா் கே.பரணி தலைமை வகித்தாா். நகரச் செயலா் ரஞ்சித், மாவட்டக் குழு முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டக் குழு சிவா வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக மாவட்டச் செயலா் எம்.ஆறுமுகம் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினாா். கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

Similar News