கோவை: Rock on Harris இசை நிகழ்ச்சி !

கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் Rocks on Harris என்ற தலைப்பில் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.;

Update: 2025-03-15 06:26 GMT
கோவை: Rock on Harris இசை நிகழ்ச்சி !
  • whatsapp icon
கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் இன்று Rocks on Harris என்ற தலைப்பில் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து நேற்று பேசிய இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், இந்த இசை நிகழ்ச்சியில் 36 பாடல்கள் மற்றும் 15-க்கும் மேற்பட்ட இசை கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.இந்த நிகழ்ச்சி மாலை 6.30 மணிக்கு தொடங்கி இருப்பதாகவும் கோவையில் பாடுவது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். இசை நிகழ்ச்சி என்பது கல்லூரி வாழ்க்கை,சோகம்,கல்யாணம் வாழ்க்கை உள்ளிட்டவை கடந்து கேட்டு மகிழ்வது தான் இசை என்றும் இந்த நிகழ்ச்சியில் 25 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பார்வையாளராக பங்கேற்பதாக தெரிவித்தார். மேலும் பொதுமக்கள் மற்றும் ரசிகர்களை உற்சாகப்படுத்த Melody Songs,Love Songs,Dance Songs போன்ற 3 வகையான பாடல்கள் இடம் பெற்ற உள்ளது.இசை என்பது அனைவராலும் ஈர்க்க கூடிய ஒன்றும் என்றும் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் அனைவரும் கண்டிப்பாக இசையை கேட்பார்கள் ஆர்வமுடன் இருக்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.

Similar News